இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நாளையும் (3ம்தேதி) மற்றும் 4ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யலாம்.
இதையொட்டி பாண்டி மெரினா கடற்கரையில் 15க்கு 10 அளவில் இந்திய கொடி வண்ணத்துடன் விழிப்புணர்வு வாசகம் மற்றும் சிலைகள் மூன்று பக்கங்களில் வரைந்துள்ளனர்.