முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி கடற்கரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்த கோலங்கள்...

புதுச்சேரி கடற்கரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்த கோலங்கள்...

Puducherry News : புதுச்சேரி கடற்கரை சாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  • 16

    புதுச்சேரி கடற்கரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்த கோலங்கள்...

    ஜி20 நாடுகளுக்கான தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா பெற்றுள்ளது. இதன்பொருட்டு இந்தியா முழுவதும் மாநாடுகளும், கருத்தரங்குகளும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 30, 31ம் தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    புதுச்சேரி கடற்கரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்த கோலங்கள்...

    இம்மாநாட்டில் ஜி 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஜி 20-ஐ முன்னிட்டு மத்திய அரசு ஜி 20 மாநாட்டின் சின்னத்தை (Logo) வெளியிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    புதுச்சேரி கடற்கரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்த கோலங்கள்...

    இச்சின்னத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் கலை, பண்பாட்டுத் துறை சார்பில் மகளிருக்கான கோலப்போட்டி, மாணவ, மாணவியருக்கான வண்ணம் தீட்டுதல் மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

    MORE
    GALLERIES

  • 46

    புதுச்சேரி கடற்கரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்த கோலங்கள்...

    கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நடைபெற்ற கோலப்போட்டியின் துவக்கத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஜி 20 நாடுகளின் தேசிய கொடிகள் வண்ண கோலங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    புதுச்சேரி கடற்கரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்த கோலங்கள்...

    இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து மகளிர் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதோடு சிறப்பாக கோலம் வரைந்த 10 மகளிருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 66

    புதுச்சேரி கடற்கரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்த கோலங்கள்...

    இதில் மாணவ, மாணவிகள் தீட்டிய வண்ணங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியில் போடப்பட்டுள்ள வண்ணக்கோலங்களை வெளிநாட்டவர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

    MORE
    GALLERIES