மேலும் சுனாமி நினைவிடம், கடலுக்கடியில் பூங்கா, பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் கருவிகள் போன்ற திட்டங்களும் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு அம்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.