புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள கசப்பிலங்கா வணிக வளாகத்தில் நேற்று மாலை பேஷன் ஷோ நடைபெற்றது. புதுச்சேரி மற்றும் ஆரோவில் பகுதியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. இவற்றை அறிமுகப்படுத்தும் விதமாக பேஷன் ஷோ நடத்தப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட இளம்பெண்களும், இளைஞர்களும் புதிய ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்து கொண்டு ஸ்டைலாக பேஷன் ஷோவில் நடந்து வந்தனர். இதனை ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஆரோவில் பகுதியில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளிநாட்டவரின் முயற்சியால் விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை விற்பனை செய்யும் நோக்கத்தில் இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கசாபிலங்கா உரிமையாளர் கபூர் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.