புதுச்சேரி அரசின் கால்நடைத்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் அழகு நாய்கள் மற்றும் பூனைகளின் கண்காட்சி நடைபெற்றது.
2/ 11
இதில் 5 பூனைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.
3/ 11
இதில் சிப்பி பாறை, லேபர், ஷெப்டு, கோல்டன் ரெட்ரீவர், ராட்வீலர், டால்மேஷன், பக், அஸ்க்கி, கிரெட்டன், பிட்புல் உட்பட 25க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் பங்கேற்றன.
4/ 11
இவை அணிவகுத்தல், கட்டளைக்கு கீழ்படிதல் என மேடையில் நிகழ்த்தி காட்டின. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்த்தது.
5/ 11
வெற்றி பெற்ற நாய் மற்றும் பூனைகளுக்கு சபாநாயகர் செல்வம், கால்நடைத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
6/ 11
ஒட்டுமொத்தமாக சாம்பியன் பட்டத்தை ஆர்த்தர் என்ற பெயரை கொண்ட நாய் வென்றது.
7/ 11
5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு புதுச்சேரி அரசு இந்த கண்காட்சியை நடத்தியது.
8/ 11
இதனை ஏராளமான உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
9/ 11
போட்டிக்கு வந்தவர்கள் பலரும் கடற்கரை சாலையில் நாய்களுடன் காத்திருந்தனர்.
10/ 11
அப்போது கடற்கரைக்கு வந்தவர்கள் நாய்களை ஆர்வத்துடன் பார்த்தனர்.
11/ 11
இதில் பின் கால்கள் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று சக்கரங்களுடன் வந்ததை பலரும் ஆச்சரித்துடன் பார்த்தனர்.
இதில் சிப்பி பாறை, லேபர், ஷெப்டு, கோல்டன் ரெட்ரீவர், ராட்வீலர், டால்மேஷன், பக், அஸ்க்கி, கிரெட்டன், பிட்புல் உட்பட 25க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் பங்கேற்றன.