தேசிய பேரிடர் மேலாண்மை முகமை, தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படை, கப்பற்படை, இந்திய மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு புதுச்சேரி அரசின் அனைத்து துறைகளும் இணைந்து அரியாங்குப்பம் என்.ஆர். நகர், காலாப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், ஆரியப்பாளையம் பாலம் உள்ளிட்ட 5 இடங்களில் ஒத்திகை நிகழ்வை நேற்று காலை முதல் மதியம் வரை நடத்தியது.
காலாப்பட்டு-கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடுங்குளத்தில் நடத்தப்பட்ட ஒத்திகையில் மழை வெள்ளத்திற்கு பதிலாக குளத்தின் நடுவே சிக்கியவர்கள்,"காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்" கூச்சலிட பேரிடர் மீட்பு குழூவினர் அவர்களை மீட்டு ஆம்புலன்சில் அனுப்புவது, மீட்டு நிவாரண மையங்களில் சேர்ப்பது, அவர்களுக்கு வேண்டிய மருத்துவம், உணவு மற்றும் இதர வசதிகளை அளிப்பது குறித்து ஒத்திகைநிகழ்வு நடந்தது.