முகப்பு » புகைப்பட செய்தி » “இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

“இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

இந்தியாவின் அழகை ரசிக்க 3,500 கி.மீ தூரம் ஆட்டோவில் கனடா குடும்பம் ஒன்று வலம்வருகிறது.

 • 17

  “இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

  கனடாவில் இருந்து இந்தியா வந்துள்ள ஒரு குடும்பத்தினர், ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 27

  “இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

  கனடாவைச் சேர்ந்த கிளிண்டன் தனது மகன் நிக்கோலஸ், மகள் லில்லி ஆகியோருடன் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தார்.

  MORE
  GALLERIES

 • 37

  “இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

  அதனைத்தொடர்ந்து, ‘ஆட்டோ ரிக்ஷா ரன் இந்தியா’ என்ற நிறுவனத்திடம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி, வைஃபை உள்ளிட்ட வசதிகள் கொண்ட ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, பயணத்தைத் தொடங்கினர்.

  MORE
  GALLERIES

 • 47

  “இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

  தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்ற இவர்கள், புதுச்சேரியில் பிரெஞ்சு கலாச்சாரம் நிறைந்த பகுதிகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

  MORE
  GALLERIES

 • 57

  “இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

  ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணிப்பதாகக் கூறும் இவர்கள், இந்தாண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாநிலங்களாகச் சென்று பார்வையிட்டு மீண்டும் கொச்சி திரும்பி கனடா செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 67

  “இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

  இந்த பயணம் குறித்துத் தெரிவித்த கிளிண்டன், கனடா குளிர்ச்சியான நாடு, இங்கு  கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதற்கேற்ப மக்கள் வாழ்வதைப் பார்க்க வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இங்குள்ள மக்கள் மென்மையாகவும், நட்பாகவும் மற்றும் அன்பாகவும் பழகுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  “இந்தியாவின் அழகை ரசிக்க...” - ஆட்டோவிலேயே இமயமலைக்குப் பயணம் செய்யும் கனடா குடும்பம்..!

  தொடர்ந்து, இந்தியாவில் யானைகள் மற்றும் குரங்குகளைப் பார்த்து ஆச்சரியப்படுவதாகக் கூறியுள்ளார். குரங்குகள் மனிதர்களோடு அன்போடு பழகுவதாக வியப்புடன் கூறியுள்ளார். இந்தியாவில் ஆட்டோ பயணம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

  MORE
  GALLERIES