puducherry | புதுச்சேரியில் மாநில அந்தஸ்துக்காக அதிமுக பந்த் போராட்டத்தின் காரணமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. முன்னதாகவே கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். ( செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி )
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சார்பில் இந்து பந்த் போராட்டம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரதி வீதியில் உள்ள அவின் மாநில செயலாளர் அன்பழகனை போலீசார் கைது செய்தனர்.
2/ 8
அப்பொழுது அங்கு குவிந்த அதிமுக நிர்வாகிகள் காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஒதியன் சாலை காவல் நிலையத்தில் அன்பழகன் வைக்கப்பட்டார்.
3/ 8
அதே வேளையில் அதிமுகவின் அழைப்பின் காரணமாக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக அரசின் பேருந்துகள் புதுச்சேரியின் எல்லையான கோரிமேடு, முள்ளோடை, கனக செட்டிகுளம், மதகடிப்பட்டு ஆகியவற்றில் நிறுத்தப்பட்டன.
4/ 8
ஆட்டோ, டெம்போக்கள் ஒரு சிலர் மட்டும் இயக்கினர். பேருந்துகள் ஏதும் இயக்கப்படாத காரணத்தினால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
5/ 8
தற்பொழுது வரை சிறிய கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பாலகம் மற்றும் டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்குப் பிறகு வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படுமா என்பதைப் பற்றி தெரிய வரும்.