New Year Fashion Show : புத்தாண்டையொட்டி புதுவையில் நடைபெற்ற பேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. புதுச்சேரி செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி
உலகம் முழுவதும் புத்தாண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொதுவாகவே, விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பது நிகழும்.
2/ 6
அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
3/ 6
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும், இந்தியா முழுவதுமாக இருந்து பேஷன் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், தவளக்குப்பம் சான்னேஸ் தனியார் அமைப்பின் சார்பில் தவளக்குப்பம் கடற்கரையில் பேஷன் ஷோ நடைபெற்றது.
4/ 6
இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு உடையணிந்தும் ரேம்ப்வாக் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
5/ 6
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை கண்டு ரசித்ததோடு, தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
6/ 6
மேலும் புத்தாண்டை ஒட்டி மது பிரியர்கள் சுற்றுலா பயணிகள் நடனத்தை ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.