90 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றிய மு.க.ஸ்டாலின்.. திருச்சி திமுக பொதுக்கூட்ட படங்கள்..
தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக-வின் பொதுக் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது. இதற்கு 350 ஏக்கர் பரப்பளவில் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில், பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் 90 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றினார். 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தையும் வெளியிட்டார்.
2/ 9
பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட துறைகளின் தற்போதைய நிலை குறித்து கட்சி நிர்வாகிகளும், வல்லுநர்களும் உரையாற்றினர்.
3/ 9
பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்ததாகவும், நவீன தமிழகமாக உருவாக்கப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
4/ 9
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
5/ 9
கூட்டத்தின் நிறைவாக துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோருடன் மு.க. ஸ்டாலின் இணைந்து மேடையில் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
6/ 9
அப்போது, இரவை பகலாக்கும் விதமாக வாண வேடிக்கை களைகட்டியது.
7/ 9
சட்டமன்றத் தேர்தலில் திமுக-வின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது எனக் கூறிய ஸ்டாலின், திமுக-வினர் வீதிவீதியாக சென்று தொலைநோக்கு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்
8/ 9
பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்த திமுக தலைவர் ஸ்டாலின்