மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்று கட்டப்பட்டிருந்த ஒரு லாரி கரும்புகளையம் பிரச்சாரம் துவங்கும் முன்னரே மக்கள் உடைத்து அள்ளிச் சென்றனர்.
2/ 5
ஒத்தக்கடை பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
3/ 5
இங்கு ஸ்டாலினை வரவேற்று வழி நெடுக கொடிகளும், பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பிரச்சார பந்தலின் வாயிலில் ஒரு லாரி கரும்புகள் இரு புறமும் தோரணமாக கட்டப் பட்டிருந்தன.
4/ 5
பிரச்சாரத்திற்காக வந்திருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கரும்புகளை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, பிரித்து கூறு கூறாக அள்ளிக் கட்டிக்கொண்டு சென்றனர்.
5/ 5
பந்தலிற்குள் ஸ்டாலின் சென்ற சில நிமிடங்களில் மொத்த கரும்புகளையும் சுருட்டிக் கொண்டு பிரச்சாரத்தில் கூட பங்கேற்காமல் சென்றார்கள் தொண்டர்கள்.