படத்தின் ரொமான்டிக் நகைச்சுவை வொர்க் அவுட்டாக, தெலுங்கு ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தைப் பார்த்தனர். இதில் ஒரு விசேஷம், எண்டமூரி வீரேந்திரநாத்தின் நாவலைத் தழுவி கோதண்டராம ரெட்டி இயக்கிய ராக்ஷஸடு என்ற படமும், கமல் படம் வெளியான அதே நாளில் வெளியானது. இரண்டுப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை. இதில் சிரஞ்சீவி, ராதா நடித்திருந்தனர்.