முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » திகில் நிறைந்த முதுமலை பயணம்.. வெறும் 350 ரூபாயில் சுற்றி பார்க்கலாம்!

திகில் நிறைந்த முதுமலை பயணம்.. வெறும் 350 ரூபாயில் சுற்றி பார்க்கலாம்!

Mudumalai Forest | நீலகிரியில் உள்ள பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றான முதுமலை சமீப காலத்தில் உலகளாவிய புகழ் பெற்றதாக திகழ்கிறது.

 • 15

  திகில் நிறைந்த முதுமலை பயணம்.. வெறும் 350 ரூபாயில் சுற்றி பார்க்கலாம்!

  சமீப காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற பெயராக மாறிவிட்டது முதுமலை. மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆனது யுனெஸ்கோ அமைப்பு மூலம் உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  திகில் நிறைந்த முதுமலை பயணம்.. வெறும் 350 ரூபாயில் சுற்றி பார்க்கலாம்!

  இங்கே வன விலங்குகளை எளிதாக பார்க்க முடியும். காட்டு யானை, வளர்ப்பு யானை , புள்ளிமான், புலி சிறுத்தை கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளுக்கு இந்த முதுமலை வனப்பகுதி வாழ்விடமாக உள்ளது . உதகையில் இருந்து முதுமலை செல்வதற்கு இரண்டு வழிகளில் செல்லலாம் .

  MORE
  GALLERIES

 • 35

  திகில் நிறைந்த முதுமலை பயணம்.. வெறும் 350 ரூபாயில் சுற்றி பார்க்கலாம்!

  ஒரு வழியானது 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலை பாதை மற்றொரு வழியாக கூடலூர் சென்று கூடலூரில் இருந்து கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் ஆனால் பெரும்பாலும் கூடலூர் வலியை தேர்வு செய்வது நல்லது. ஏன் எனில் தலைக்குந்தா சோதனை சாவடியில் வாகனங்கள் சோதிக்கப்பட்டு பின் அனுமதிக்கப்படுகிறது. சோதனை சாவடியில் வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அதனால் கூடலூர் பாதையில் பயணம் மேற்கொள்வது நல்லது. முதுமலை வன காப்பகத்தில் ஜீப் சவாரி செய்வதற்கு நபர் ஒன்றுக்கு 350 ரூபாய் முதல் வசூலிக்கப்படுகிறது ஒரு மணி நேரம் நடைபெறும்.

  MORE
  GALLERIES

 • 45

  திகில் நிறைந்த முதுமலை பயணம்.. வெறும் 350 ரூபாயில் சுற்றி பார்க்கலாம்!

  இந்த ஜீப் சவாரியில் ஏராளமான வனவிலங்குகளை பார்க்க முடியும். திகில் நிறைந்த இந்த பயணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். காலை மாலை என ஜீப் சவாரி நடைபெறுகிறது காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் ஜீப் சவாரிகள் நடைபெறுகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  திகில் நிறைந்த முதுமலை பயணம்.. வெறும் 350 ரூபாயில் சுற்றி பார்க்கலாம்!

  பின்னர் 5 மணிக்கு தெப்பக்காடு வனப்பகுதியில் அமைந்துள்ள வளர்ப்பு யானைகளை வளர்க்கும் பகுதியில் யானைகளுக்கு உணவளிக்கப்படுகிறது . இதை சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் இங்கு அமைந்துள்ள இயற்கை சூழல் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

  MORE
  GALLERIES