முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்

மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்

மக்னா யானைகளைப் பிடித்து பராமரிப்பது அல்லது வேறு பகுதியில் விடுவது தான் மிகவும் சவாலான செயலாகும். செய்தியாளர்: அய்யாசாமி (நீலகிரி)

  • Local18
  • 16

    மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்

    மாவட்டம் கூடலூர் தேவாலா பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி கூடலூர் தேவாலா பகுதியில் வீட்டை சேதப்படுத்திய பாப்பாத்தி என்ற பெண்மணியை யானை தாக்கிக் கொன்றது.இந்த சம்பவத்திற்கு பிறகு பிஎம் 2 என பெயரிடப்பட்ட அந்த மக்னா யானையை கடந்த 21 ஆம் தேதி முதல் இன்று வரை வனத்துறையினர் பிடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சியானது 8 நாளாக தொடர்ந்து வரும் நிலையில். மக்னா யானையின் குணாதியங்களை விவரிக்கும் தொகுப்பு தான் இது.

    MORE
    GALLERIES

  • 26

    மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்

    காடுகளில் வாழும் தாவர உண்ணிகளில் மிகப்பெரிய உயிரினமான யானைகள் காடுகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக யானை கூட்டங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட யானைகள் மக்னாவாக மாறுகிறது. மற்ற யானைகளை காட்டிலும் மக்னா யானை உருவத்திலும் மற்றும் செயல்பாடுகளிலும் வித்தியாசமாக இருக்கும். மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண் யானைகள் மக்னா யானை எனப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 36

    மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்

    காடுவாழ் மக்கள் இதனை மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுகின்றனர்.  மக்னா யானைகளுடனும் பெண் யானைகள் இணை சேருகின்றன. பல நேரங்களில் இவற்றை ஆண் யானைகள் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. தந்தமற்ற மக்னா யானைகள் பிற பெண் மற்றும் ஆண் யானைகளின் கூட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்படுவதால், இவைகள் தனியாக வாழ்கின்றன என விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தந்தமற்ற மக்னா யானையால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து வாழ முடியாததால் இவை மூர்க்கத்தனத்தனமாக நடந்து கொள்ளும்.

    MORE
    GALLERIES

  • 46

    மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்

    பல சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். மிகவும் மூர்க்கத்தனமான மக்னா யானையை, வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து யானை முகாம்களில் வளர்க்கும் போது இயல்பாக காணப்படுகின்றன. தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னா யானையின் தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும். வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்துடன் காணப்படும்.

    MORE
    GALLERIES

  • 56

    மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்

    பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும். மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும். தந்தம் இல்லாத நிலையில் கூட, உடல் வலிமை கூடியதான உடலமைப்பை இயற்கை மக்னா யானைக்கு வழங்கியுள்ளது ஆண் காட்டு யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும் பொழுது தோற்கடிக்கப்படும் யானைகள் தனித்து சென்றுவிடும் பெரும்பாலான யானைகள் அப்படி இல்லை என்றாலும் மக்னா யானை கூட்டத்திலிருந்து பிரிந்து தனிமையில் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 66

    மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்

    மக்கா யானை குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கையில் பொதுவாக மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தது தான் மக்னா யானை என கூறுவது முற்றிலும் தவறானது மரபணு குறைபாட்டால் மக்னா யானைகள் உருவாகிறது மூர்க்கத்தனமாக உள்ள மக்னா யானைகள் அதனுடைய இனப்பெருக்கத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில் நூற்றில் 90 சதவிகித யானைகள் மக்னாவாகத்தான் உள்ளது .தமிழகத்தில் இதுபோன்று யானைகள் தென்படும் பொழுது அந்த யானைகள் மனிதர்களை கொள்ளும் என்ற அச்சம் மக்களிடையே உண்டாவதாக தெரிவிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள் மக்னா யானைகளைப் பிடித்து பராமரிக்கவோ வேறு பகுதியில் விடுவது என்ற செயல் சவாலான ஒன்று என தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES