மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கன பெய்து வருகிறது.
2/ 7
கூடலூர், பந்தலூர், குந்தா, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக 3வது முறையாக இந்த தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3/ 7
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் தரை பாலங்களை கடக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
4/ 7
ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுவதுடன், மரங்கள் வேரோடு சாய்கின்றன.
5/ 7
இரவு முழுவதும் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் உதகையில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் HPF பகுதியில், ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6/ 7
மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
7/ 7
உதகையில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்களும் அதேபோல் மைசூர் கூடலூரில் இருந்து உதகையை நோக்கி வந்த வாகனங்களும் இருபுறமும் அணிவகுத்து நின்றன.