நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. கூடலூர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் பல கிராமங்களில் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்துள்ளது. கூடலூரில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் இந்த கனமழை காரணமாக இருவயல், புரமன வயல்,புத்தூர் வயல் உள்ளிட்ட கிராமங்களில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.