நீலகிரி மாவட்டம் முழுவதும் டிரோன்கள் இயக்க தடை உள்ளது. அப்படி இயக்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில் குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனை உள்ளது. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இந்த சுற்றுலாதலம் இயங்கி வருகிறது. எதிரே கேத்ரின் நீர் வீழ்ச்சி விழும் காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும்.