முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » உதகையில் ராட்சத மரம் சாலை குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு... 

உதகையில் ராட்சத மரம் சாலை குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு... 

உதகை மஞ்சூர் சாலையில் ராட்சத மரம்  குறுக்கே விழுந்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. (செய்தியாளர்: ஐய்யாசாமி, ஊட்டி)

 • 15

  உதகையில் ராட்சத மரம் சாலை குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு... 

  உதகையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு குறைந்து காணப்பட்டாலும் சாலையோரங்களில் மழையால் ஈரப்பதத்துடன் இருக்கும் மரங்கள் விழுகின்றன.

  MORE
  GALLERIES

 • 25

  உதகையில் ராட்சத மரம் சாலை குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு... 

  இந்நிலையில் உதகை மஞ்சூர் சாலையில் டி எஃப் எல் பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் இன்று அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் கடை மீது விழுந்தது.

  MORE
  GALLERIES

 • 35

  உதகையில் ராட்சத மரம் சாலை குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு... 

  இதனால் அப்பகுதிக்கு செல்லும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. மரம் விழுந்த கடையில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 45

  உதகையில் ராட்சத மரம் சாலை குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு... 

  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் வாகனங்களும் அதேபோல் மஞ்சூரில் இருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  உதகையில் ராட்சத மரம் சாலை குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு... 

  உதகையில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாமல் இருந்தாலும் கடந்த வாரம் பெய்த கன மழையால் பல பகுதிகளில் உள்ள மரங்கள் ஈரப்பதத்துடன் விழும் நிலையில் காணப்படுவதால் உடனடியாக ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

  MORE
  GALLERIES