ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்தாலே இனி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நடைமுறைப்படி ஓட்டுநர் பயிற்சி முடித்த பின்பு ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்று வாகனத்தை ஓட்டிக்காட்ட வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். புதிய விதியின் படி, அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வாகனத்தை இயக்கிப் பார்க்க பிரத்யேக தடம் அமைக்க வேண்டும்.
3.இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சி பெற்ற நபர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது, ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அங்கீகாரம் பெற்ற மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தால் ஓட்டுநர் உரிமம் பெற்றதற்கு சமம் என்றும் தெரிவிக்கப்பட்டது.