முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » தென்காசிக்காரருக்கு லாட்டரியில் ₹12 கோடி பரிசு..

தென்காசிக்காரருக்கு லாட்டரியில் ₹12 கோடி பரிசு..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள இரவிய தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த சர்பூதின் என்பவருக்கு லாட்டரியில் ரூ12 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது.

  • 16

    தென்காசிக்காரருக்கு லாட்டரியில் ₹12 கோடி பரிசு..

    வெங்கடேஸ்வரன் என்பவர் 2003 ல் இருந்து 18 வருடமாக கேரளாவில் லாட்டரி கடை ஒன்று நடத்தி வருகின்றார். திருவனந்தபுரம் N.M.K ஏஜென்சியில் இருந்து இவர் இந்த லாட்டரிகளை வாங்கி விற்பனை செய்துள்ளார் .

    MORE
    GALLERIES

  • 26

    தென்காசிக்காரருக்கு லாட்டரியில் ₹12 கோடி பரிசு..

    தமிழக-கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவுவில் இவரது லாட்டரி கடை உள்ளது. இவரது கடையில் லாட்டரி வாங்கிய XG 358753 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசான ரூ12 கோடி கிடைத்துள்ளது. பரிசு விழுந்த நபர் யார் என்பது தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    தென்காசிக்காரருக்கு லாட்டரியில் ₹12 கோடி பரிசு..

    கேரளாவில் அரசு அனுமதியுடன் நடைபெறும் கேரளா சம்மர் பம்பர் லாட்டரி குலுக்கல் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு ரூ.12 கோடிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.300.

    MORE
    GALLERIES

  • 46

    தென்காசிக்காரருக்கு லாட்டரியில் ₹12 கோடி பரிசு..

    கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரிக்காக மொத்தம் 33 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது அதில் . 32,99,982 லாட்டரி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டது. 12 டிக்கெட்டுகள் சேதமடைந்துள்ளது. ரூ.12 கோடிக்கான டிக்கெட் என்பதால் தொடங்கியவுடன் விரைவாக முடிவடைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    தென்காசிக்காரருக்கு லாட்டரியில் ₹12 கோடி பரிசு..

    இந்நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் பம்பர் லாட்டரிக்கான குலுக்கள் நாடைபெற்றுள்ளது. திருவனந்தபுர புதிய மேயரான ஆர்யா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த குலுக்களில் XG 358753 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்துள்ளது. ஆனால் பரிசு விழுந்த கோடீஸ்வரர் யார் என்பது இதுவரைத் தெரியவில்லை. பம்பர் டிக்கெட்டுக்கான உரிமையாளரை பலரும் வலை வீசி தேடிக்கொண்டிருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 66

    தென்காசிக்காரருக்கு லாட்டரியில் ₹12 கோடி பரிசு..

    தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது இந்த லாட்டரிச் சீட்டை வாங்கியிருக்கலாம் என்று பலரும் கூறி வந்த நிலையில் தென்காசிகாரர் ஒருவர் 12 கோடிக்கு அதிபதியாகவுள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள இரவிய தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த சர்பூதின் என்பவருக்கு கிடைத்துள்ளது. தற்போது பரிசு பெற்றவர் தன் குடும்பத்தினருடன் கேரள மாநிலம் பத்தினம் திட்டாவிற்க்கு பரிசு தொகை வாங்க சென்று உள்ளனர்.

    MORE
    GALLERIES