கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஐரோப்பாவுக்கு வெளியே போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக அவரது இந்திய வருகை அமைந்துள்ளது.அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தடைந்த போரிஸ் ஜான்சனுக்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி எழுதிய Guide to London என்ற புத்தகமும், ராட்டையின் மாதிரி வடிவமும் போரிஸ் ஜான்சனுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.பின்னர், இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியை சந்தித்து பேசினார். ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதானி குழுமம் மற்றும் பிரிட்டன் நிறுவனங்கள் இணைந்து விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்து குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், குஜராத் முதலமைச்சர் புபேந்திர பட்டேலுடன் ஹலால் சென்ற போரிஸ் ஜான்சன், பிரிட்டனின் JCB நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளிக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசும் ஜான்சன், இந்தியாவிலிருந்து சுமார் எட்டாயிரத்து 300 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையிலான, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.