முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

Uber green | புகழ்பெற்ற உலகளாவிய ரைட்-ஷேரிங் App-ஆன Uber நிறுவனம், இந்தியாவில் தனது சர்விஸ்களை மின்மயமாக்கும் முயற்சியை இந்தியாவில் தற்போது முன்னெடுத்து உள்ளது.

  • 18

    அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

    புகழ்பெற்ற உலகளாவிய ரைட்-ஷேரிங் App-ஆன Uber நிறுவனம், இந்தியாவில் தனது சர்விஸ்களை மின்மயமாக்கும் முயற்சியை இந்தியாவில் தற்போது முன்னெடுத்து உள்ளது. இதற்காக Uber நிறுவனம் தனது உலகளாவிய EV தயாரிப்பான Uber Green-ஐ இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

    புதிய Uber Green ஆப்ஷனை வரும் ஜூன் 2023 முதல் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள யூஸர்களுக்கு அறிமுகப்படுத்த உளளதாக Uber அறிவித்து உள்ளது. Uber Green உதவியுடன் இப்போது Uber App-ஐ பயன்படுத்தும் யூஸர்கள் மாசுபாட்டை குறைக்க பங்களிக்க முடியும். எப்படி என்றால் Uber Green ஆப்ஷனை செலக்ட் செய்வதன் மூலம், பயணிகள் தங்கள் ரைட்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை புக் செய்ய முடியும்

    MORE
    GALLERIES

  • 38

    அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

    இந்த சர்விஸ் மூலம் இந்தியாவில் தேவைக்கேற்ப EV சேவையை வழங்குவோம் என கூறியிருக்கும் Uber நிறுவனம், தங்களின் இந்த சேவை பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 15 நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் Uber Green சர்விஸ் கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 48

    அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

    இந்த சேவை உலகளவில் குறைந்த அல்லது உமிழ்வு இல்லாத சவாரிகளுக்கு மிகவும் அணுகக்கூடிய ஆன்-டிமாண்ட் மொபிலிட்டி சொல்யூஷனாக இருக்கிறது. Uber Green-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகன (EV) பயன்பாட்டின் வேகத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை Uber துரிதப்படுத்தி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

    Uber Green-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாட்டை நிலையான வழியில் எதிர்த்துப் போராட நகரங்கள் மற்றும் அரசாங்கங்களின் பார்ட்னராக இருக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என Uber கூறி இருக்கிறது. Uber Green அறிமுகத்தின் ஒரு பகுதியாக ஜூன் மாதம் லித்தியம், எவரெஸ்ட் மற்றும் Moove போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 25,000 எலெக்ட்ரிக் கார்களை அதன் பிளாட்ஃபார்மில் சேர்க்க உள்ளதாக Uber தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

    வரும் 2024-ஆம் ஆண்டிற்குள் 10,000 மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த, Zypp Electric உடன் Uber இணைந்துள்ளது. தவிர EV-க்கள் மற்றும் CNG உள்ளிட்ட க்ளீனர் ஃப்யூயல் வாகனங்களை வாங்குவதற்கான ஆதரவுக்கு Uber நிறுவனம், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியுடன் (SIDBI) கொலாப்ரேட் செய்துள்ளது. மேலும் Uber EV-க்களை வேகமாக சார்ஜ் செய்வதற்கு ஏற்ப, பிரத்யேக சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காக GMR Green Energy நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

    வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் எங்கள் பிளாட்பார்மில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரைடையும் மின்மயமாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் பூர்த்தி செய்ய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என Uber நிறுவனத்தின் மொபிலிட்டி & பிசினஸ் ஆப்ரேஷன் மூத்த துணைத் தலைவர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறி இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 88

    அடுத்த மாதம் 3 முக்கிய நகரங்களில் அறிமுகமாகிறது Uber Green.! எங்கெல்லாம் தெரியுமா?

    இதுதவிர, Jio-bp-யுடன் இணைந்து தனது உலகளாவிய மொபிலிட்டி ஒப்பந்தத்தை பிபி பல்ஸுடன் இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது Uber. Uber-ன் சமீபத்திய முன்முயற்சிகள் நாட்டில் sustainable mobility மற்றும் போக்குவரத்து துறையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளும் அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன.

    MORE
    GALLERIES