முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்!

பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்!

 • 16

  பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்!

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 7ம் தேதி பிரம்மோற்சவம் துவங்க உள்ளதால்  கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் ஏழுமலையான் கோவிலை கழுவி சுத்தம் செய்து நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி இன்று திருப்பதி மலையில் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 26

  பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்!

  திருப்பதி ஏழுமலையான் கோவிலை ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை அதாவது,வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனி வார ஆஸ்தானம், உகாதி ஆகிய திரு நாட்களுக்கு முன் வரும் செவ்வாய் கிழமையில் கழுவி சுத்தம் செய்து நறுமண கலவையை பூசுவது வழக்கம்.

  MORE
  GALLERIES

 • 36

  பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்!

  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவம் இம்மாதம் 7ஆம் தேதி துவங்க உள்ளது. எனவே பிரம்மோற்சவ கொடியேற்றத்திற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை ஆன இன்று ஏழுமலையான் கோவில் முழுவதுமாக கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 46

  பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்!

  அப்போது கோவில் கருவறை துவங்கி, ஏழுமலையான் கோவில் வளாகத்தில் உள்ள துணைக் கோயில்கள்,பிரசாத தயாரிப்புக் கூடம், தங்க கோபுரம் ஆகியவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பூஜை பொருட்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் ஒட்டுமொத்தமாக கழுவி சுத்தம் செய்யப்பட்டன.

  MORE
  GALLERIES

 • 56

  பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்!

  அதனைத் தொடர்ந்து சந்தனம், நாமக்கட்டி, ஜவ்வாது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட நறுமன கலவை கோவில் சுவர்களுக்கு பூசப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 66

  பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்!

  தொடர்ந்து ஜீயர்கள் ஏழுமலையானுக்கு புதிய பட்டு வஸ்திர சமர்பணம் செய்தனர். நிகழ்ச்சியில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

  MORE
  GALLERIES