ஆன்லைன் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்ட நிலையில், நவம்பர் , டிசம்பர் மாதம் முழுவதற்குமான 300 ரூபாய் டிக்கெட் விற்று தீர்ந்தன. இதனால், சிறப்பு கட்டண தரிசன டோக்கன் மூலம் 2022ம் ஆண்டுதான் வெங்கடேஷ பெருமாளை தரிசிக்க முடியும். அதேவேளையில், இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் ஆன்லைன் மூலம் நாளை தொடங்கவுள்ளது.
அதன்படி நாளொன்றுக்கு 8000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட இருக்கும் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டண டோக்கனை போன்று இலவச டோக்கனும் விரைவில் விற்று தீரக்கூடும் என்பதால் காலையிலேயே முன்பதிவு செய்வதன் மூலம் பக்தர்கள் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். காலை 9 மணிக்கு முன்பதிவு தொடங்கவுள்ளது.