முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

Thrisshur Athirapilly Waterfalls | கேரளாவில் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவியால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. படங்கள் : சஜயகுமார், (கன்னியாகுமரி )

  • 18

    ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

    மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சாலக்குடி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது இந்த அதிரப்பள்ளி அருவி. 'இந்தியாவின் நயாகரா' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் அளவிற்கு பிரமாண்டமாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

    இந்த அருவியின் மேல் சென்று பார்த்தால் அருவியை சுற்றியிருக்கும் பகுதிகளின் பசுமையை கண் குளிர ரசிக்கலாம். அதிரப்பள்ளி அருவியானது, மலைக்காடுகளின் உள்ளே சோலையாறு பகுதியில் பாய்கிறது. இந்த அருவி அமைந்திருக்கும் பகுதி செழிப்பான வன உயிரினங்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 38

    ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

    இந்த வனப்பகுதியில் மட்டும் புலிகள், மான்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.மிகவும் செழிப்பான  நிலங்கள் உள்ள இந்த பகுதி இந்தியாவில் பல வகை பறவைகள் பாதுகாப்பாக வாழும் காடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

    இந்த பகுதியினுள் நுழைய வேண்டுமென்றால் வனத்துறையிடம் முன் அனுமதியும், நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டியதும் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 58

    ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

    தற்போது கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கேரளாவில் உள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 68

    ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

    திருச்சூர் மாவட்டத்தில் உள்ள  பெருங்குத்து அணையில்  இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால்  சாலக்குடி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .

    MORE
    GALLERIES

  • 78

    ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

    இதனால் அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிக்க  மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 88

    ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

    அதிரப்பள்ளி அருவி, திருச்சூர் மாவட்டம், கேரளா

    MORE
    GALLERIES