முகப்பு » புகைப்பட செய்தி » 10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

600-year-old Banyan Tree In Telangana | சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த ராட்சத ஆலமரம் தற்போது கூட வலுவாக இருந்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த ஆலமரம் நீண்ட வேர்களை கொண்டுள்ளது.

 • 18

  10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

  நம் நாடு முழுவதும் பல இடங்களில் எண்ணற்ற ஆலமரங்கள் பல ஆண்டுகளாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன. மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆலமரம் கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

  இதற்கிடையே தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம் ஒன்றை பற்றிய விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 38

  10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

  இந்த மரம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள Kukkala Gudur என்ற கிராமத்தில் இருக்கிறது. ஆனால் இந்த கிராம மக்களின் கூற்றுப்படி, இந்த மிகப்பெரிய ராட்சத ஆலமரத்தை யார் நட்டு வளர்த்தார்கள் அல்லது இதன் பாரம்பரிய வரலாறு என்ன என்று யாருக்கும் அவ்வளவு சரியாக தெரியவில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் கம்பீரமான இந்த ஆலமரம் பல தலைமுறைகளாக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 48

  10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

  இந்த ராட்சத ஆலமரம் சுமார் 10 தலைமுறைகளாக இருந்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதே நேரம் கிராமவாசிகள் இந்த மாபெரும் மரத்தை பற்றிய பல கட்டுக்கதைகளை நம்புகிறார்கள். சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த ராட்சத ஆலமரம் தற்போது கூட வலுவாக இருந்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த ஆலமரம் நீண்ட வேர்களை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

  இந்த மரம் இருக்கும் கிராமத்திலோ அல்லது அருகிலுள்ள பகுதிகளிலோ கடும் வறட்சி மற்றும் மோசமான காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டால் தங்கள் பகுதி செழிப்பாக இருக்க இந்த பழங்கால ஆலமரத்தை வழிபட்டு பிரார்த்தனை செய்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

  இது மட்டுமின்றி வழிபாட்டிற்கு பின் மக்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஆலமரத்தடியில் அமர்ந்து உணவு சாப்பிட்டு சிறிது நேரம் செலவழிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த பழமையான ஆலமரத்தின் பயன்கள் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறும் கிராம மக்கள், கொளுத்தும் கோடை வெயிலின் போது இந்த பெரிய மரம் தரும் நிழலில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் இளைப்பாறுவதாக கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 78

  10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

  இந்த மிகப்பெரிய ஆலமரம் இருக்கும் வழியே செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் மற்றும் வழிப்போக்கர்கள் தங்களது பயணத்தை தொடரும் முன் இந்த மரத்தடியில் ஓய்வெடுப்பது வழக்கம்.

  MORE
  GALLERIES

 • 88

  10 தலைமுறைகளை கண்ட 600 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வறட்சி நேரங்களில் மரத்தை வழிபடும் மக்கள்..

  முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் TRS ராஜ்யசபா எம்பி ஜோகின்பள்ளி சந்தோஷ் குமார், மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பில்லாமரி (Pillalamarri)என்ற பெரிய ஆலமரத்தை பாதுகாக்க, தனது நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மரம் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது மஹ்பூப்நகர் நகரத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் இருக்கிறது.

  MORE
  GALLERIES