நாடெங்கிலும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. உங்கள் வயதுக்கும், அனுபவத்திற்கும் நீங்களும் கூட குறைந்தபட்சம் 10, 20 சிவன் கோவில்களில் வழிபாடு நடத்தியிருப்பீர்கள். அனைத்து கோவில்களிலுமே கருமை நிறத்திலான கிரானைட் கல்லில் சிவலிங்கம் இருப்பதை பார்த்து தரிசனம் செய்திருப்பீர்கள். இந்த லிங்கம் பெரும்பாலும் பண்டைய கால மன்னர்களால் அல்லது முன்னோர்களால் நிறுவப்பட்டவை ஆகும்.
இங்குள்ள கோபார்தங்கா என்ற பகுதியில் உள்ள கங்கனா என்ற குளத்தில் உள்ளூர் குழந்தைகள் இருவர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீரில் மிதந்து வந்த வெள்ளை நிற லிங்கத்தை இந்தக் குழந்தைகள் கண்டெடுத்தனர். இதுகுறித்த தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியது. இந்த நிலையில், அங்குள்ள அர்ச்சகர் ஒருவர், இதனை பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு சென்றார்.
அதே சமயம், தற்காலிக ஏற்பாடாக, சீதாலா கோவிலில் இந்த லிங்கம் வைக்கப்பட்டது. அங்கு 4 நாட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த லிங்கத்தை வழிபடுவது இயலாத காரியம் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவலிங்கம் மீண்டும் குளத்தின் கரைக்கே கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில் குளத்தின் கரையிலேயே கொட்டகை அமைத்து லிங்கத்தை நிறுவவும், அதை வழிபாடு செய்யவும் உள்ளூர் மக்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளக்கரையில் உள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.
வேறு எங்கும் வைக்க இயலவில்லை : குளக்கரையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் வேறு எங்குமே தங்கவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நாராயணன் சாது என்பவர் கூறுகையில், “ஒருவர் மாற்றி ஒருவராக 7 பேர் இந்த லிங்கத்தை அவர்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால், லிங்கத்தை அவர்களால் வைத்திருக்க இயலவில்லை. இந்தக் குளக்கரையை தவிர வேறெங்கும் இந்த சிவலிங்கத்தை நிறுவ முடியவில்லை. ஆகவே, இங்கேயே கோவில் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான நன்கொடை வசூல் நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார்.