தெலங்கானாவில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தெலங்கானாவில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு உட்பட அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஜூலை ஒன்றாம்தேதி முதல் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.