முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

  • 15

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

    சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் நடைபெறும்  44வது சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக  குழு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.

    MORE
    GALLERIES

  • 25

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

    44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad)  போட்டி சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதில், 200 நாடுகளைச் சேர்ந்த 2000 சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான  டிக்கெட் விற்பனை கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 35

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

    ஜூலை 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் "செஸ் ஒலிம்பியாட் 2022" போட்டிகளுக்கான துவக்க விழா கோலாகலமாக துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 45

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

    கொரோனா பாதிப்பு காரணமாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுக்க முடியாத நிலையில்,  திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் அடங்கிய தமிழக பிரதிநிதிகள் குழு இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

    MORE
    GALLERIES

  • 55

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

    மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அனுராக் சிங் தக்கூர், எல்.முருகன் ஆகியோரையும் தமிழக குழு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.

    MORE
    GALLERIES