புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் சிற்பக்கலை பயின்று, பெங்களூர் சித்ரகலா பரிஷத் கல்லூரியில் சிற்பக்கலையில் முதுகலைப்பட்டம் பெற்றவர் ஓவியர்-சிற்பி குபேந்திரன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கி பல விருதுகளை வென்ற இவர், வீராம்பட்டினம் கடற்கரையில் பெரியாரின் உருவத்தை பிரமாண்டமான மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் உயிரிழப்பது விவாதப் பொருளாகியுள்ள நிலையில், Ban NEET, நீட் வேண்டாம் என்றும், சமீபத்தில் ட்ரண்டான 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகமும் சிலையின் கீழ் பதியப்பட்டுள்ளன. இந்த மணல் சிற்பம் இன்று காலை 8.00 மணி முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. இதைப் பார்வையிட்ட மக்கள் சிற்பி குபேந்திரனை கைத்தட்டி பாராட்டினர்.