முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

ஏ.டி.எம் பயன்பாட்டாளர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய எஸ்.பி.ஐ வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

  • 16

    எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

    இன்று முதல் எஸ்.பி.ஐ வங்கியின் பயனாளர்களுக்கு புதிய விதிகள் அறிமுகமாகின்றன.

    MORE
    GALLERIES

  • 26

    எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

    எஸ்பிஐ ஏடிஎம் கட்டணங்கள்  : எஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம், ஜூலை 1 முதல் 4 முறைக்கு மேல் ATM அல்லது வங்கி கிளை மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

    எஸ்பிஐ காசோலை கட்டணம் : எஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர், ஒரு ஆண்டில் 10 காசோலை தாள்களை இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட காசோலைகளை பயன்படுத்த வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாய் கட்டணம் + GST வசூலிக்கப்படும். இதே 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்தின் பரிவர்த்தனைக்கு, 75 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 46

    எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

    டிடிஎஸ் பிடித்தம் :  கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, அரசு அடுத்த மாதத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கும் மேல் டிடிஎஸ் செலுத்துவோரை கண்டறிந்து அவர்களை வரி வரம்புக்குள் கொண்டு வரவும் இது உதவும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

    சிண்டிகேட் வங்கி IFSC இயங்காது :  கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்ட நிலையில், சிண்டிகேட் வங்கியின் ஐ எஃப் எஃப் சி கோடுகள் ஜூலை முதல் இயங்காது என கனரா வங்கி அறிவித்துள்ளது. சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் தங்கள் வங்கிக்கு சென்று IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ளலாம். பழைய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயன்படுத்தி, ஜூலை 1 முதல் வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

    2 வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு புதிய காசோலை புக் :  ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் இணைக்கப்பட்டன இதனால் இந்த இரு வங்கி வாடிக்கையாளர்களும் புதிய செக் புக்கினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES