ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்த முகேஷ் அம்பானியை வரவேற்றார். தொடர்ந்து, மாநாட்டில் உரையாற்றிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆந்திராவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சில்லறை வணிகம் மூலம் ஆந்திராவில் உருவாக்கப்படும் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள தொழில்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தின் இன்ஜீனியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்கவிழாவைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர், ஆந்திர மாநிலத்தில் 2002 இல் கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் உருவாக்கப்பட்ட KG-D6 இல் சுமார் 1,50,000 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் இந்தியாவின் சுமார் 30 சதவீத தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் கூறியுள்ளார்.