1917ல் அரசியல் போராட்டம் ஒரு முக்கியத் திருப்பத்தை எடுத்தபோது மூன்றாவது கொடி ஏற்றப்பட்டது . ஹோம் ரூல் இயக்கத்தின் போது டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் லோகமான்ய திலகர் இதை ஏற்றினர். இந்தக் கொடியில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை கிடைமட்டக் கீற்றுகளில் ஏழு நட்சத்திரங்கள் ,ஒரு மூலையில் வெள்ளை நிற பிறை மற்றும் நட்சத்திரமும் இருந்தது.
இந்தக் கொடி இந்திய தேசிய ராணுவத்தின் போர்க் கொடியாக இருந்தது. 1931 ஆம் ஆண்டு கொடி வரலாற்றில் ஒரு அடையாளமாக இருந்தது. மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கொடி, தற்போதுள்ள கொடியைப் போல் , காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்டு மகாத்மா காந்தியின் சுழலும் சக்கரத்தை மையமாக வைத்து இருந்தது.