முகப்பு » புகைப்பட செய்தி » லகான் திரைப்படத்தில் நடித்த ரேகாவை நினைவிருக்கிறதா..?

லகான் திரைப்படத்தில் நடித்த ரேகாவை நினைவிருக்கிறதா..?

இந்தி திரைப்படம் என்பதால், ரேகா என்றவுடன் இந்தி நடிகை ரேகாவைத்தான் பலரும் நினைப்பார்கள். நடிகை ரேகா இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லையே என்று கேட்கலாம். இந்த திரைப்படத்தில் ரேகா என்று கூறப்படுவது இதில் நடித்த குதிரை தான்.

 • 16

  லகான் திரைப்படத்தில் நடித்த ரேகாவை நினைவிருக்கிறதா..?

  லகான் திரைப்படத்தை மறக்க முடியுமா.? பாலிவுட் நடிகர் அமீர் கான் நாயகனாக, சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய பீரியட் படமாக, பல ஆண்டுகளுக்கு முன் வெளியான மெகா பிளாக்பஸ்டர்! இன்று வரை லட்சக்கணக்கான திரைப்பட ரசிகர்களால் விரும்பப்படும் திரைப்படங்களில் ஒன்று லகான். லகான் திரைப்படத்தில் நடித்த வெவ்வேறு கேரக்டர்களும், அவர்களுக்கான லைஃப்டைம் கதாபாத்திரங்கள் ஆக அமைந்திருக்கும். ரசிகர்கள் மனதிலும் அந்த பாத்திரங்கள் ஆழமாக பதிந்திருக்கும்! அதில் ஒரு பாத்திரம் தான் ரேகா!

  MORE
  GALLERIES

 • 26

  லகான் திரைப்படத்தில் நடித்த ரேகாவை நினைவிருக்கிறதா..?

  இந்தி திரைப்படம் என்பதால், ரேகா என்றவுடன் இந்தி நடிகை ரேகாவைத்தான் பலரும் நினைப்பார்கள். நடிகை ரேகா இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லையே என்று கேட்கலாம். இந்த திரைப்படத்தில் ரேகா என்று கூறப்படுவது இதில் நடித்த குதிரை தான். 1995 ஆம் ஆண்டிலிருந்து, ரேகா என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பெண் குதிரை மேற்கு குச் காவல்துறையின் மவுண்ட்டட் யூனிட்டில் பணி செய்து வருகிறது. தன்னுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு கூட போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் ஆறு ஆண்டுகள் பணியாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 36

  லகான் திரைப்படத்தில் நடித்த ரேகாவை நினைவிருக்கிறதா..?

  பொதுவாகவே ஒரு சில இடங்களில் இருக்கும் காவல்துறை யூனிட்களில், நாய், குதிரை போன்ற விலங்குகளும் பணியில் ஈடுபடுத்தப்படும். மேற்கு குச் போலீஸ் அணியில் பல்வேறு குதிரைகள் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரே ஒரு பெண் குதிரை மிகவும் விசேஷமானது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான லகான் என்ற திரைப்படத்தில் ரேகா என்ற இந்த பெண் குதிரை மிகவும் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்து இருந்ததால், ரேகாவை எப்போதுமே ஸ்பெஷலாக தான் கவனிப்பார்களாம்.

  MORE
  GALLERIES

 • 46

  லகான் திரைப்படத்தில் நடித்த ரேகாவை நினைவிருக்கிறதா..?

  இந்த திரைப்படத்தில் நிறைய குதிரைகள் நடித்திருக்கின்றன இது இவற்றில் எது ரேகா என்று அடையாளம் காண்பதில் குழப்பம் தேவை இல்லை பிரிட்டிஷ் இளவரசி எலிசபத் இந்தியர்களுக்கு தகவல் தெரிவிக்க பயன்படுத்திய குதிரை தான் ரேகா. ஏற்கனவே கூறியுள்ளது படி 1995 ஆம் ஆண்டு குஜராத் டிஜிபி பல குதிரைகளை வாங்கி பல்வேறு காவல்துறையினருக்கு அலாட் செய்தார். இதில், வெஸ்ட் குட்ச் காவலர்களுக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த குதிரை தான் லகான் திரைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

  MORE
  GALLERIES

 • 56

  லகான் திரைப்படத்தில் நடித்த ரேகாவை நினைவிருக்கிறதா..?

  2000 ஆண்டின் தொடக்கத்தில் லகான் குழுவினர் குஜராத் குட்ச் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக வந்தபோது அவர்கள் வெஸ்ட் குட்ச் காவல்துறையின் உதவியைக் கோரினார்கள். அப்போது படப்பிடிப்புக்கு அவர்களுக்கு 4-5 குதிரைகள் தேவைப்பட்டன. அதில் ரேகாவுக்கு முக்கியமான ரோல் கிடைத்தது. லகான் திரைப்படத்தில் நடித்த குதிரைகளில் தற்போது ரேகா மட்டும் தான் உயிருடன் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 66

  லகான் திரைப்படத்தில் நடித்த ரேகாவை நினைவிருக்கிறதா..?

  ஒரு குதிரையின் சராசரி ஆயுட்காலம் 25 – 30 ஆண்டுகள் ஆகும். ஆனால் ரேகாவிற்கு தற்போது 32 வயதாகி இருக்கிறது. குதிரைக்கு வயதானாலும் இன்னும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது, எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை. தன் வாழ்நாள் முழுவதுமே காவல்துறையில் பணியாற்றிய ரேகாவுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. காவல்துறை பணியில் இல்லை என்றாலும் மேற்கு குட்ச் போலீசார் ரேகாவை பராமரித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES