முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

Tirumala: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்தார்.

 • 18

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

  உலகின் முன்னணி தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.வருங்கால மருமகள் ராதிகாவுடன் இன்று காலை ஏழுமலையான் அபிஷேக சேவையில் பங்கேற்றார். கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 28

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

  திருமலையில் தரிசனம் செய்த பிறகு, ரங்கநாயகுலா மண்டபத்தில் வேத பண்டிதர்கள் முகேஷ் அம்பானிக்கு வேதம் மந்திரம் முழங்க ஆசி வழங்கினர். மேலும், கோயில் நிர்வாகிகள் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 38

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

  முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கோவிலில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய விஷயங்கள் புதிய வசதிகள் ஆகியவற்றை விளக்கினர். தொடர்ந்து முகேஷ் அம்பானி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

  MORE
  GALLERIES

 • 48

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

  கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த முகேஷ் அம்பானி, "ஏழுமலையான் அருள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், கோவிலில் நாளுக்கு நாள் சிறப்பான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது, இந்திய மக்களின் பெருமைமிகு சின்னமாக திருப்பதி கோவில் உள்ளது" என்றார்.

  MORE
  GALLERIES

 • 58

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

  பின்னர்,கோசாலை நிர்வாகத்தை சந்தித்த முகேஷ் அம்பானி, அவர்களிடம் சிறிது நேரம் பேசி தங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 68

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

  அங்கிருந்த லட்சுமி மற்றும் பத்மாவதி என்ற இரு யானைகளிடம் முகேஷ் அம்பானி ஆசி பெற்றார். அங்கிருந்து ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையை அடைந்தார்.

  MORE
  GALLERIES

 • 78

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

  கோவிலுக்கு வந்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் சிறப்பான வரவேற்பு தந்தனர்.திருப்பதி எம்பி விஜயசாய் ரெட்டி, எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி ஆகியோரும் முகேஷ் அம்பானியுடன் இருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 88

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

  முகேஷ் அம்பானியின் வருகை குறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.தரிசனம் முடிந்த நிலையில் காலை உணவை எடுத்துக் கொண்ட பின் முகேஷ் அம்பானி ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் மும்பை திரும்புகிறார்.

  MORE
  GALLERIES