இந்த ரூபாய் நோட்டுத் தேவைகளுக்கான கணக்கெடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கையாக ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் ரிசர்வ் வங்கியின் செலவைக் குறைப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 5000 கோடி, ரூபாய் நோட்டு அச்சடிப்பு மற்றும் அதனை நிர்வகிக்கும் முறைக்காக செலவிடப்படுவதாகவும், கொரோனா பெருந்தொற்று காரணமாக ரூபாய் பரிவர்த்தனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.