உலகின் தலைசிறந்த மேதைகளுள் ஒருவரான டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இந்து மதத்தையும், இந்தியாவில் புரையோடிக் கிடக்கும் சாதிக்கு எதிராகவும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். சாதிய அமைப்பை ஒழிப்பதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். இந்து மதத்தையும், வேதங்களை ஆய்வு செய்து, பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். (Image: Getty Images)
டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1942 முதல் 1946 காலகட்டத்தில், தொழிலாளர்கள் தொடர்பாக பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளார். 12 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக 1942-ம் ஆண்டு நடந்த 7-வது தொழிலாளர்கள் மாநாட்டில் குறைத்தார். மேலும், தொழிலாளர்களுக்கு, விடுமுறை, காப்பீடு, மருத்துவ விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் என்ற அடிப்படை தேவைகளை கொண்டுவந்தார். இந்தியத் தொழிலாளர்களுக்கு அம்பேத்கர் செய்த நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். (Image: Getty Images)
மஹாராஷ்டிர மாநில அரசு அம்பேத்கரின் பேச்சுகள், எழுத்துக்கள் அடங்கிய புத்தகங்களை 37 தொகுதிகளாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியிட்டுள்ளது. அம்பேத்கர், புத்தரும் அவரது தம்மமும், புத்தரும் கார்ல் மார்க்சும், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும், இந்து மதத்தின் புரட்டுகள் ஆகிய நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரின் குறிப்புகள் மற்றும் எழுத்துக்களைத் தொகுத்துத்தான் 37 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. (PC: GETTY Images)