எப்போதும் விருவிருப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் ரயில் நிலையங்களில் முதல் இடத்தை பிடித்திருப்பது ஹவுரா ரயில் நிலையம். கொல்கத்தாவில் உள்ள இந்த ரயில் நிலையத்தில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நாடுகளின் பல்வேறு மூளைக்கு இங்கு இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இங்கு மட்டும் 23 ரயில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. 26 ரயில் பாதைகள் இங்கு இருந்து மட்டும் இயக்கப்படுகிறது. அந்த அளவிற்கு ஒரு பெரிய ரயில் சேவை கட்டமைப்பை இந்த ரயில் நிலையம் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாட்டின் பொருளாதார தலைநகரமாக உள்ள மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 18 ரயில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. நான்காம் இடத்தில் 16 ரயில் நடைமேடைகளுடன் புதிய டெல்லி ரயில் நிலையமும், ஐந்தாம் இடத்தில் 15 ரயில் நடைமேடைகளுடன் சென்னை சென்டரல் ரயில் நிலையமும் உள்ளது.