பிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.
2/ 8
பிரன்சிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை பெறுவதற்கான ஒப்பந்தம், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. (Image: IAF/ Twitter)
3/ 8
அதில், முதல் கட்டமாக 5 விமானங்கள் திங்கட்கிழமை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஏர் கமாண்டர் ஹிலால் அகமது ரதேர் தலைமையில் 5 ரபேல் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா புறப்பட்டன.
4/ 8
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தாஃப்ரா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பலுடன் 5 ரபேல் விமானங்களின் தொடர்பு இணைக்கப்பட்டது.(Image: Special Arrangement)
5/ 8
அதைத் தொடர்ந்து இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த 5 ரபேல் விமானங்களை இரண்டு சுகோய் 30எம்கேஐ விமானங்கள் எதிர்கொண்டு வரவேற்றன.
6/ 8
சுகோய் விமானங்கள் புடை சூழ இந்திய வான் எல்லையில் ரபேல் விமானங்கள் சீறிப் பாய்ந்த நிலையில், ரபேல் விமானங்கள் அம்பாலா விமாப்படை தளத்தில் தரையிறங்குவதற்கு வாழ்த்து தெரிவித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில் பதிவிட்டார்.
7/ 8
அதன்பின் அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கிய ரபேல் விமானங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
8/ 8
விமானப்படை தலைமை தளபதி பதூரியா உள்ளிட்டோர் ரபேல் விமானங்களை வரவேற்றனர். ரபேல் விமானங்கள் தரையிறங்கியதை உள்ளூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
18
5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!