முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » பிரதமர் மோடியின் 70ம் பிறந்தநாளை ஒருவாரத்திற்குக் கொண்டாட புதுவை பாஜகவினர் திட்டம்

பிரதமர் மோடியின் 70ம் பிறந்தநாளை ஒருவாரத்திற்குக் கொண்டாட புதுவை பாஜகவினர் திட்டம்

பிரதமர் மோடியின் பிறந்தநாளில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்ய புதுவை பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

 • 13

  பிரதமர் மோடியின் 70ம் பிறந்தநாளை ஒருவாரத்திற்குக் கொண்டாட புதுவை பாஜகவினர் திட்டம்

  பிரதமர் மோடியின் 70ம் பிறந்தநாள் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வித்தியாசமாகக் கொண்டாடும் நோக்கில் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தை புதுச்சேரி பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 23

  பிரதமர் மோடியின் 70ம் பிறந்தநாளை ஒருவாரத்திற்குக் கொண்டாட புதுவை பாஜகவினர் திட்டம்

  மத்திய அரசின் திட்டங்களை விளக்கி ஒளிப்பலகை மூலம் அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் புதிய முயற்சியை பாஜகவினர் மேற்கொண்டுள்ளனர். அதற்கான தொடக்க நிகழ்வை தவளக்குப்பம் கிராமப்பகுதியில் புதுச்சேரி பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆரம்பித்து வைத்தார்.

  MORE
  GALLERIES

 • 33

  பிரதமர் மோடியின் 70ம் பிறந்தநாளை ஒருவாரத்திற்குக் கொண்டாட புதுவை பாஜகவினர் திட்டம்

  அரியாங்குப்பம் , வீராம்பட்டினம், மனவெளி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் இன்றிலிருந்து ஒருவார காலத்துக்கு இரவு நேர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அந்நிகழ்வில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

  MORE
  GALLERIES