முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

  • 17

    ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

    இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்த தமிழணங்கு ஓவியம் சர்ச்சையையும் புகழையும் பெற்றுள்ள நிலையில், புதுச்சேரியை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் அந்த ஓவியத்தில் இருப்பது போன்ற தமிழணங்கு சிற்பத்தை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

    புதுச்சேரியில் பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிப்பவர் முத்தமிழ்ச்செல்வன்.இவர் அங்குள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது நுண்கலை ஆசிரியர் உமாபதியிடம் கிராம புறங்களில் பயனற்று கிடக்கும் தென்னை நார்,வாழை மட்டை, பனை மர பொருட்கள் ஆகியவற்றை கொண்டு கலை பொருட்களை உருவாக்கும் பயிற்சியை பெற்றார்.

    MORE
    GALLERIES

  • 37

    ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

    இந்தநிலையில் ஓவியர் சந்தோஷ்நாராயணன் உருவாக்கிய”தமிழணங்கு” ஓவியத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து  அதனை நுண்கலை சிற்பமாக மாணவர் வடிவமைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 47

    ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

    இதனை சமூக ஆர்வலர் காயத்ரி ஸ்ரீகாந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட எழுத்தாளர் இந்திரன் சமூக ஊடகத்தில் இந்த வடிவமைப்பை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்ச் சமூகத்தில் இப்போதுதான் தமிழ் அழகியல் கூறுகளுடன் கூடிய படைப்புச் செயல்பாடு தீவிரம் அடைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

    என் பிறந்த மண் புதுச்சேரி அரசு பள்ளியில் பயிலும் முத்தமிழ்ச்செல்வன், 11வகுப்பு மாணவன் அதை சிற்பமாக வெளிப்பாடு செய்திருக்கிறான். அதை பதிவிட்டTrGayathri Srikanthக்கு நன்றி. ஒரு கலைவிமர்சகன் என்ற வகையில் இதனைமிக உன்னதமான தமிழ் மண்ணின்அடையாளத்தோடு கூடிய அசல் படைப்புக் கலை வெளிப்பாடாக கருதுகிறேன். மேல்நாட்டுச் சூரியனிடமிருந்து கடன்வாங்கித் தேய்ந்து போகும் நிலாக்களாக நிறைய படைப்புகள் நவீனத் தமிழ் ஓவியரகளால் செய்யப்படும்போது மாணவன் முத்தமிழ்ச் செல்வன் படைப்பு மிகவும் அசல் ஜீவரசத்துடன் விளங்குவதாக நான் கருதுகிறேன்.

    MORE
    GALLERIES

  • 67

    ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

    முற்றிலும் தமிழ் மண்ணில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட தமிழன்னையின் தமிழணங்கே வடிவம் சோலை இலை மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டது. நமது கலை தமிழ் அடையாளம் கொண்டதாக மாறவேண்டும் என்று கடந்த 30ஆண்டுகளாக நான் எனது “தமிழ்அழகியல்” நூலில் வற்புறுத்தி வருவது இன்று இயல்பாகவே கள்ளம் கபடமற்ற நிலையில் நனவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்

    இந்த நுண்கலை சிற்பத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் கொடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் மாணவர் முத்தமிழ்ச்செல்வன்.  மாணவனின் நுண்கலை சிற்பத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES