கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கடலில் வந்து சேரும் குப்பைகளின் அளவு பெருமளவில் குறைந்திருக்கிறது. இதனால் கடலில் அரியவகை உயிரினங்களை காணமுடிகிறது.
புதுச்சேரி மற்றும் யில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை நடத்தி வருபவர் அரவிந்த். இவர் சென்னை நீலாங்கரையில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் 18 மீட்டர் ஆழத்தில் நீச்சல் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்.
2/ 5
அப்போது கடலுக்கு அடியில் அரிய வகையான கடல்வாழ் உயிரினங்களை அவர் கண்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
3/ 5
இதில் அதிக விஷத்தன்மை கொண்ட பாக்ஸ் ஜெல்லி பிஷ் ( box jelly fish) என்ற அரியவகை மீனை படம் பிடித்துள்ளார்.
4/ 5
"இந்த மாதத்தில் 10 நாட்கள் மட்டும் காணப்படும் மீன் எந்தப் பகுதியிலிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் இந்த மீன் அபாயகரமானது, எதிரியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வாலால் தாக்கும்.
5/ 5
இது மனிதன் மீது பட்டால் எட்டு மணி நேரத்துக்கு பெராலிசிஸ் வரை ஆபத்து ஏற்படக்கூடும், அதனால் ஆழ் கடலில் நீச்சல் செல்பவர்கள் இந்த உயிரினத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் அரவிந்த்.