மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மோடி வெட்கமில்லாத பிரதமர் என விமர்சித்தார். 40 திரிணாமுல் எம்எல்ஏக்கள் தன்னோடு தொடர்பில் இருப்பதாக பிரதமர் தெரிவித்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக திருடர்களால் நிரம்பியுள்ளதாகவும், திரிணாமுல் தியாகிகளால் நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.