இந்த கட்டடத்தை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தைவிட 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரியது. முக்கோண வடிவிலான புதிய பார்லிமென்ட் கட்டிடம், தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகிலேயே கட்டமைக்கப்பட உள்ளது. 2022ம் ஆண்டிற்குள், அந்த புதிய நாடாளுமன்றம் கட்டிமுடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், திடீரென்று இந்தக் கட்டடப்பணிகளை ஆய்வு செய்ய நேற்று இரவு பிரதமர் மோடி சென்றார். அங்கு ஒரு மணி நேரம் வரை இருந்து அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தார். கட்டிடம் கட்டும் இடத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.