இந்நிலையில், ஹீராபென் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது பதிவில் கூறியதாவது, "ஒரு புகழ்பெற்ற 100 ஆண்டு சகாப்தம் இறைவனின் திருவடியில் இளைப்பாறுகிறது." என்று பதிவிட்டிருந்தார். அதன் பிறகு தாய் ஹீரா பென்னின் உடலை பார்த்து அவர் கண்கலங்கினார். மேலும் மலர் வளையம் வைத்து உடலின் முன்பு கும்பிட்டு விழுந்து கண் கலங்கினார். அதன்பிறகு ஹீரா பென்னின் இறுதி சடங்குகள் துவங்கியது.