முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடிய நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார்.

  • 110

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவையில் ரயில் புறப்படுவது, இரண்டு நிலையங்களுக்கு இடையிலான ரயிலின் இயக்கம், அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவது, கதவுகளை திறப்பது, மூடுவது என அனைத்தும் தானியங்கி முறையில் நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 210

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    CBTC எனப்படும் தொலைத்தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு முறையில் இந்த ரயில் இயங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 310

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணிணி, வழித்தடத்தில் உள்ள கணிணி, ரயிலில் உள்ள கணிணி மூன்றும் இணைந்து இந்த ஓட்டுநர் இல்லா பயணத்தை வழி நடத்துகின்றன.

    MORE
    GALLERIES

  • 410

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    ரயில் நிலையம் மற்றும் தண்டவாளம் பற்றிய தகவல்களை வழித்தடத்தில் உள்ள கணிணி கட்டுப்பாட்டு மையத்தோடு பகிர்ந்து கொள்கிறது. இரண்டு கணிணிகளும் தரும் தகவல்களின் அடிப்படையில் ரயிலில் உள்ள கணிணி ரயிலை இயக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 510

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    ஒரு நிலையத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய பின்னர் கதவு மூடப்படும். ரயிலின் அனைத்து கதவுகளும் மூடாவிட்டால் ரயில் புறப்படாது. ரயில் முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டிருக்கும்.

    MORE
    GALLERIES

  • 610

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    தண்டவாளப் பகுதியின் வீடியோ காட்சிகளை கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்க்கும் வகையில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 710

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு பொருளோ அல்லது நபரோ விழுந்து விட்டால் அதுகுறித்த தகவலை வழித்தடத்தில் உள்ள கணிணி அனுப்ப, உடனடியாக ரயில் நிற்கும்.

    MORE
    GALLERIES

  • 810

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    அவசர காலங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் பயணிகள் தொடர்பு கொள்ளும் வசதி செய்யப்பட்டிருக்கும். அவசர கால பிரேக்கை பயணி ஒருவர் பயன்படுத்தினால் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ரயிலில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 910

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் கூடுதல் ரயில்களை அந்த வழித்தடத்தில் இயக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 1010

    நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

    இத்தனை நவீன வசதிகள் கொண்டிருந்தாலும் தற்போதைக்கு ஓட்டுநர் இல்லா ரயிலின் இயக்கத்தை கண்காணிக்க ஒரு ஓட்டுநர் ரயிலில் இருப்பார் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் முழுமையான தானியங்கி ரயில் சேவையாக இயங்கும் என்று ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES