இதனால் மண்பாண்டத் தொழிலாளர்கள் அருகில் உள்ள தமிழக கிராமங்களில் இருந்து மண், களிமண் போன்றவற்றை விலைக்கு வாங்கி வந்து மண்பாண்டங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். கூனிமுடக்கு, தென்னல், கென்டிகுப்பம், முருங்கப்பாக்கம், வில்லியனுார், தவளகுப்பம், மதகடிப்பட்டு, கணுவாய்ப்பேட்டை கண்டமங்கலம், பெரிய பாபு சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானைகளை தயாரித்து வருகின்றனர்.