முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

Puducherry | 3.5 அடியில் கம்பீரமாக நிற்கும்தத்ரூபசிற்பம்...அழியும் விளம்பில் வங்காள புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வன ஆராய்ச்சியாளர் | படங்கள்: (இளவமுதன், புதுச்சேரி)

  • 18

    தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

    புதுச்சேரி அரசின் கைவினை கிராமம் முருங்கம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனரான முனைவர் புபேஷ் குப்தா, கடந்த 17 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 28

    தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

    சுற்றுலாத் துறையின் கீழ் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கைவினைக் கலைஞர்கள் மட்டுமல்லாது ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் இங்கு பல்வேறு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 38

    தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

    அதிலும் குறிப்பிடத்தக்க வகையில் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள், மிருகங்கள், பூச்சி வகைகள் போன்றவற்றை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 48

    தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

    புபேஷ் குப்தாவின் முயற்சியால் புதுச்சேரியை அலங்கரித்து வரும் இது போன்ற சிற்பங்கள் தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என தென் மாநிலங்களுக்கும் செல்ல  துவங்கியுள்ளன. இங்கு உருவாகும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் திருப்பதி பூங்காக்களிலும் சேலம் சரணாலயங்களும் வண்டலூர் மிருக காட்சி சாலையில் மக்களை ஈர்க்கும் வகையில் இயற்கை சூழலுடன் வைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

    புதுச்சேரி அரசும் சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் இணைந்து இந்த விழிப்புணர்வு சிற்பங்கள் உருவாக்கி வருகின்றன. இங்கு உருவாக்கப்பட்ட  புலி சிற்பம் கடந்த 2019 ல்   இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.அண்மையில் உலக புலிகள் தினத்தை யொட்டி ஆந்திர அரசிடம் 3.5 அடி உயரத்தில் புலி சிலை அளிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 68

    தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

    தற்போது சென்னை தனியார் ஸ்டூடியோவிற்கு 8வது புலி அனுப்பப்பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பிற்காக சிற்பங்களை வடிப்பது மகிழ்ச்சி என்றாலும் இந்தியாவை பொறுத்தவரை  9 இனங்களான புலிகள் இருந்துள்ளன. இவற்றில் மூன்று வகையானவை ஏற்கனவே அழிந்து விட்டன. தற்பொழுது ஆறு வகையான புலிகள் மட்டுமே உள்ளன. அவையும் அழிவின் விளிம்பில் உள்ளன. காடுகள் அழிப்பு, மிருகங்கள் வேட்டை என தொடர் நிலையால் இந்த ஆறு வகை புலிகளும் அழியும் நிலையில் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 78

    தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

    ஒரு காட்டிற்கு மிக முக்கிய விலங்காக விளங்குவது புலி. அது இருந்தால் காடு நிலையாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதனை வலியுறுத்தும் வகையில் இந்தியாவின் மிகச் சிறந்த "வங்காள புலி" எனப்படும் ராயல் பெங்காலி புலியை  சிற்பமாக இவர் உருவாக்கியுள்ளார். ஏற்கனவே இவர் உருவாக்கிய ஏழு புலிகள் புதுச்சேரி ஆந்திரா தமிழ்நாடு போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 88

    தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

    நிஜ புலியின் உயரம் மற்றும் வண்ணங்களை கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன புலிகள் இனம் அழிவதை தடுக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதனை உருவாக்குவதாக பூபேஷ் குப்தா தெரிவிக்கிறார்.

    MORE
    GALLERIES