மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக் கூட்டத்திற்கு 1,272 இடங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர்கால கூட்டத் தொடருக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்திலான தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தேசிய சின்னத்தை தாங்கி பிடிப்பதற்காக 6500 கிலோ எடையில் ஸ்டீலிலான அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.