அதிலிருந்து வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் பரெளனி ரயில்வே நிலையம் கட்டப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பரௌனி சந்திப்பு வழியாக மட்டுமே சென்று வருகின்றன. இங்கு தினமும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். அதன்படி கதாரா ரயில் நிலையத்தை 1வது பிளாட்பாராமாக கணக்கிட்டு பின்னர் 3கிமீ தொலைவில் கட்டப்பட்ட பரெளனி ரயில் நிலையத்தில் 2வது பிளாட்பாரத்தில் இருந்து தொடங்கியுள்ளனர்.
இதற்குப் பிறகு 1967-ல் பரௌனி பகுதியில் உர நிறுவனங்கள் நிறுவப்பட்டு 1976-ல் உரங்கள் உற்பத்தி தொடங்கியது. அனைத்து இடங்களுக்கும் ரயில் சேவைகள் இந்த சந்திப்பு வழியாக தொடர்ந்தது. இதனால் இந்த ரயில் நிலையம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. ஆனால், பரௌனி ரயில்வே ஜங்ஷனில் ஒன்றாம் எண் நடைமேடை மட்டும் இன்னும் அமைக்கப்படவில்லை.